Employability Skill and Motivation

 

.ஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் 

வேலைவாய்ப்பு மற்றும் திறனறிவு நிகழ்ச்சி 

 

     விழுப்புரம் புதிய பஸ் நிலையம் மிக அருகாமையில் அமைந்துள்ள ஈ.ஸ் பாலிடெக்னிக் கல்லூரியில். வேலைவாய்ப்பு மற்றும் திறனறிவு நிகழ்ச்சியை கல்லூரியின் தாளாளர் திரு. செந்தில்குமார். தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். LUCAS TVS ன் மனிதவள மேம்பாட்டு துறை துணை மேலாளர் திரு.டி.சித்தா யோகா மன்னன். அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்கள் வாழ்வில் மேம்படவும் மற்றும் தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு பெறுவது பற்றியும் விரிவாகக் கூறினார். குறிப்பாக சேமிப்பு திறன் நல்ல பழக்கவழக்கம் தொழிற்சாலைகளில் எந்தெந்த துறைகள் உள்ளன டிப்ளமோ மாணவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் முன்னேற்றம் பற்றி மிகவும் சிறப்பாகவும் விரிவாகவும் பேசினார். முதலாவதாக கல்லூரி முதல்வர் அனைவரையும் வரவேற்று டிப்ளமோ மாணவர்கள் எந்தெந்த துறைகளில் வேலைவாய்ப்பு பெறுவது பற்றி விரிவாக பேசினார். விழா நிகழ்ச்சிகளை முதலாமாண்டு துறைத்தலைவர் திருமதி. புஷ்கலாஅம்பாள் தொகுத்து வழங்கினார். விழா நிகழ்ச்சிகளை துறைத்தலைவர்கள் ரவி, கஜேந்திரன், அபிதாபேகம், நிவேதா, மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஏற்பாடு செய்தனர் இறுதியாக துணை முதல்வர் ஆர் ரமேஷ் நன்றி உரை ஆற்றினார்.

 

Location